இதையடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினி மற்றும் இயக்குனர் நெல்சனுக்கு கூடுதல் பணம் மற்றும் சொகுசு கார்களை வாங்கிக் கொடுத்துள்ளார். அதன் பின்னர் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் கூடுதல் சம்பளமும் சொகுசு காரும் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் இப்போது ஜெயிலர் திரைப்படம் இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடான மலேசியாவிலும் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது. மலேசியாவில் மட்டும் 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் ஜெயிலர் திரைப்படம் மற்ற இந்திய படங்களின் அனைத்து வசூல் சாதனைகளையும் மலேசியாவில் முறியடித்துள்ளது.