ஷாருக்கானுக்காக எழுதிய கதையில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கும் ஏ ஆர் முருகதாஸ்!

Webdunia
வியாழன், 21 செப்டம்பர் 2023 (08:17 IST)
தர்பார் படத்தின் தோல்வியால் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் சில வருடங்களாக படம் இயக்காமல் இருந்து வருகிறார். இடையில் அவர் அக்‌ஷய் குமார் மற்றும் ஒரு குரங்கை வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த படம் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை.

இதனால் மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை ஸ்பைடர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கதை பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஷாருக் கானுக்காக எழுதி வைத்திருந்தாராம் ஏ ஆர் முருகதாஸ். ஆனால் அந்த கதை அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை. இந்நிலையில் அந்த கதையைதான் சிவகார்த்திகேயனுக்கு ஏற்றார்போல மாற்றி இப்போது தொடங்க உள்ளாராம் முருகதாஸ். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, மிருனாள் தாக்கூர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொலல்ப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்