இன்று மாலை வெளியாகிறது நயன்தாரா 75 படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ!

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2023 (11:27 IST)
திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான கனெக்ட் திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. அதையடுத்து அவர் அட்லி இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில்  நயன்தாரா 75 என்ற அறிவிப்போடு ஒரு படம் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று இப்போது மொத்த ஷூட்டிங்கும் முடிந்துள்ளது. இந்த படத்தில் நயன்தாராவோடு ஜெய், சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்கியுள்ளார். படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை இந்த படத்தின் அறிமுக கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்