இந்த படத்தில் நயன்தாராவோடு யோகி பாபு, தேவதர்ஷினி மற்றும் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை பிளாக்ஷீப் யுட்யூப் சேனலில் நிகழ்ச்சிகளை வழங்கிய ட்யூட் விக்கி இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் கொடைக்கானல் அருகே ஒரு கிராமத்தில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் தற்போது கொடைக்கானலுக்கு வரமுடியாது என சொல்லிவிடவே, அவருக்காக சென்னையில் ஏலக்காய் தோட்டம் போல செட் ஒன்றை போட்டு ஷூட் செய்ய உள்ளார்களாம். மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் எல்லாம் கொடைக்கானலில் நிஜ ஏலக்காய் தோட்டத்தில் படமாக்கப்படும் என சொல்லப்படுகிறது.