சார் அந்த ஸ்க்ரிப்ட் கொஞ்சம் கொடுங்க… வெங்கட் பிரபுவைக் கலாய்த்த ஏ ஜி எஸ் நிறுவனம்!

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2023 (11:17 IST)
லியோ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த மாதம் முன்னர் இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று  விஜயதசமியை முன்னிட்டு “பூஜை போடனும், அந்த ஸ்க்ரிப்ட கொஞ்சம் கொடுங்க” என ஏஜிஎஸ் நிறுவனம் கேட்க, அதற்கு ஜாலியாக பதிலளித்துள்ளார் வெங்கட் பிரபு “இது ஒரு நல்ல கேள்வி, கரெக்‌ஷன் சொல்ல மாட்டீங்கன்னு சொன்னா ஆஃபிஸ்ல எங்க இருக்குன்னு சொல்றேன். ஸ்க்ரிப்ட் எப்போவோ ரெடி. முதல் ஷெட்யூலே 15 நாள் முடிஞ்சிடுச்சே.. என்ன அட்மின்” எனக் கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்