லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த பட ஷூட்டிங் தொடக்கம்!

வெள்ளி, 13 அக்டோபர் 2023 (13:50 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணத்துக்குப் பின்னர் நடித்த படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. இந்நிலையில் இப்போது புதிதாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.  இந்த படத்தை சர்தார் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் நயன்தாராவோடு யோகி பாபு, தேவதர்ஷினி மற்றும் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  இந்த படத்தை பிளாக்‌ஷீப் யுட்யூப் சேனலில் நிகழ்ச்சிகளை வழங்கிய ட்யூட் விக்கி இயக்கி வருகிறார்.

கடந்த மாதம் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸான நிலையில் இன்று இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்