தமிழகத்தில் திரையரங்குகள் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் திறக்க வாய்ப்பு இருப்பதாக நேற்று தகவல் வந்ததையடுத்து திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இனிமேல் ஓடிடி பிளாட்பாரத்தில் திரைப்படங்களை பார்க்க வேண்டிய நிலை இருக்காது என்றும் புதிய திரைப்படங்களை ரசிகர்களுடன் திரையரங்குகளில் அமர்ந்து ரசிக்கலாம் என்றும் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியில்இருந்தனர்.
ஆனால் சற்று முன் பேட்டி அளித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க தற்போது அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் திரையரங்குகள் திறக்க தற்போது எந்த தளர்வுகளும் வழங்கப்பட மாட்டாது என கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திரையரங்குகள் மட்டுமன்றி வழிபாட்டு தளங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், ஆகியவற்றுக்கும் தற்போது எந்த தளர்வுகளும் இல்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் சினிமா ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
ஏற்கனவே ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் திரையரங்குகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்பதால் இனி பெரிய படங்களும் ஓடிடியில் ரிலீசாகும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது