காவி ஊற்றி இழிவுபடுத்துவது வாடிக்கையாகி விட்டது: பா.ரஞ்சித் ஆவேசம்

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2020 (13:45 IST)
கடந்த சில நாட்களாக கந்தசஷ்டி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் பாஜகவினர் இதுகுறித்து போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இன்று காலை திடீரென பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்ட விவகாரத்தால் கந்தசஷ்டி பரபரப்பு மறக்கப்பட்டு  தற்போது ஊடகங்களில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய விவகாரம் குறித்த செய்திகள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுள்ளது
 
கோவை மாவட்டம் சங்கராபுரம் என்ற பகுதியில் இருந்த பெரியார் சிலை மீது இன்று காலை மர்ம நபர்கள் சிலர் காவி சாயம் ஊற்றியதால் அந்த பகுதியில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பலரும் தங்களது சமூக வலைதளங்களில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்ததை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தனது டுவிட்டரில் இந்த சம்பவம் குறித்து கூறியிருப்பதாவது: தந்தை பெரியாருக்கும், அண்ணல் அம்பேத்கருக்கும் காவி ஊற்றி இழிவுபடுத்துவது வாடிக்கையாகி விட்டது. இந்துத்துவ பிற்போக்குத்தனத்தை எதிர்ப்போரை பொது சமூகத்திற்க்கு எதிரியாக மாற்றுதல், அழித்தொழித்தல் என தங்கள் வேலைத்திட்டத்தை மத உணர்வை தூண்டி செயல்படுத்தி கொள்கிறார்கள்! விழிப்படைவோம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்