பீரோ தலை மேல் விழுந்ததால் இளம்பெண் ஒருவர் பலியானதாக கூறப்பட்ட நிலையில், அவரது காதலன் இது ஆணவக் கொலை என புகார் அளித்துள்ள நிலையில், அந்த பெண்ணின் பிணத்தை தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் சேர்ந்த வித்யா என்ற பெண், தலை மீது பீரோவில் விழுந்ததால் படுகாயம் அடைந்ததாகவும், இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே அவர் இறந்ததாகவும் கூறப்பட்டது. இதனை அடுத்து அந்த பெண்ணின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
இந்த நிலையில், வித்யாவை வெண்மணி என்ற இளைஞர் காதலித்து வந்த நிலையில், தனது காதலியின் மரணத்தில் சந்தேகம் கொண்டு காவல்துறையில் புகார் அளித்தார். வித்யா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான் தனக்கு அவரை திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என கேட்டதாகவும், ஆனால் பெண் வீட்டார் மறுத்துவிட்டதாகவும், இது ஆணவ கொலையாக இருக்கலாம் என்றும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, வித்யா பிணத்தை தோண்டி எடுக்கும் பணியில் காவல்துறை ஈடுபட்டு இருப்பதாகவும், இது ஆணவ கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.