விஜய் போலவே ஓடிடி விஷயத்தில் உறுதியாக இருக்கும் மாதவன்: பரபரப்பு தகவல்

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (08:15 IST)
திரையரங்குகள் திறக்காத காரணத்தினால் பல திரைப்படங்கள் ஒடிடி பக்கம் சென்று கொண்டிருந்தாலும் விஜய் தனது ’மாஸ்டர்’ படத்தைத் திரையரங்கில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று உறுதியாக உள்ளார் எத்தனை கோடி கொடுத்தாலும் ஓடிடி பக்கம் செல்ல வேண்டாம் என்றும் இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு தான் பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகவும் மாஸ்டர் தயாரிப்பாளரிடம் விஜய் கூறியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே தியேட்டர் எப்பொழுது திறக்கின்றதோ அப்போதுதான் மாஸ்டர் வெளிவரும் என்று கூறப்படுகிறது
 
விஜய் போலவே ஓடிடி விஷயத்தில் மாதவனும் தனது முடிவில் உறுதியாக இருக்கிறாராம். அவர் தயாரித்து நடித்த ’ராக்கெட்டரி’ என்ற திரைப்படத்தை பல ஒடிடி நிறுவனங்கள் மிகப்பெரிய தொகைக்கு கேட்டும் அவர் இந்த படத்தை ஓடிடிக்கு தரமுடியாது என்றும் திரையரங்குகள் தான் ரிலீஸ் செய்வேன் என்று கூறியுள்ளார் 
 
கேரள விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக தான் இந்த படத்தை எடுத்துள்ளதாகவும் பணத்திற்காக இந்த படத்தில் தான் தயாரித்து நடிக்கவில்லை என்றும் அதனால் திரையரங்குகளில் மட்டுமே இந்த படத்தை ரிலீஸ் செய்வேன் என்றும் அவர் உறுதியாக கூறியுள்ளார் 
 
எனவே கோடிக்கணக்கில் பணத்தை கொட்ட தயாராக இருந்த ஓடிடி நிறுவனங்கள் ‘ராக்கெட்டரி’ படம் கிடைக்காத ஏமாற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்