முதன் முதலாக ஓடிடியில் லியோ திரைப்படம் படைக்கப் போகும் சாதனை!

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2023 (07:48 IST)
கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆன லியோ திரைப்படம் இதுவரை 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. படம் மிகப்பெரிய அளவில் வசூலித்தாலும், விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களையே பெற்றது. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாகம் மிகவும் தட்டையாக உருவாக்கப்பட்டு இருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இரண்டாம் பாதியில் இடம்பெற்ற பிளாஷ்பேக் காட்சி ரசிகர்களை இருக்கையில் நெளிய வைத்தது. இதையடுத்து இப்போது லோகேஷ் ‘தலைவர் 171’ படத்துக்கான திரைக்கதை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து சமீபத்தில் லியோ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் டிசம்பர் 21 ஆம் தேதி முதல் லியோ திரைப்படம் ஆங்கிலத்திலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் படம் ஒன்று முதல் முறையாக ஆங்கிலத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்