உன் வளர்ச்சியும், உன் உயரமும் எனக்கு பெருமையாக இருக்கிறது- பாரதிராஜா

சனி, 2 டிசம்பர் 2023 (15:09 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தொழிலதிபருமான  நெப்போலியன் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவருக்கு பாரதிராஜா வாழ்த்துகள் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நெப்போலியன். அதன்பின்னர்  சூப்பர் ரஜினியின் எஜமான் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார் நெப்போலியன்.

இதையடுத்து, சீவலப்பேரி பாண்டியன், கிழக்குச் சீமையிலே, தாயகம், எட்டுப்பட்டி ராசா, விருமாண்டி, தசாவதாரம்  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் இணைந்து போக்கிரி படத்திலும், கார்த்தியுடன் சுல்தான் படத்திலும் ந்டித்திருந்தார். 

கடந்த 2009 ஆம் ஆண்டு திமுக சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேர்வு செய்யபப்ட்டு,  சமூக நீதி இணையமைச்சராக பொறுப்பில் இருந்தார்.

தற்போது அமெரிக்காவில் தொழிலதிபராக விளங்கி வரும் நெப்போலியன் பிறந்த நாளில் பாரதி ராஜா அவரை வாழ்த்தியுள்ளார்.
 

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’பேரன்புகொண்ட
மாணவன்
திரு.நெப்போலியனே..
உன் வளர்ச்சியும்,
உன் உயரமும்
எனக்கு பெருமையாக
இருக்கிறது. இன்னும்,
வான் உயர, வளமுடன்,
மகிழ்வுடன், வாழ
உன் பிறந்த நாளான
இந்த நன்னாளில்
வாழ்த்துவதில் பெருமை
கொள்கிறேன்
வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்