விரைவில் ரஜினியின் லால் சலாம் ஷூட்டிங் தொடக்கம்… எங்கு தெரியுமா?

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (16:16 IST)
ஐஸ்வர்யா இயக்கும் புதிய படமான லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகன்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் கடைசியாக குசேலன் மற்றும் ரா ஒன் ஆகிய படங்களில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தமிழகத்தின் காரைக்கால் பகுதியில் இதன் ஷூட்டிங் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்