திருப்பதியை தொடர்ந்து தர்காவுக்கு செல்லும் ரஜினிகாந்த்!

வியாழன், 15 டிசம்பர் 2022 (10:20 IST)
பிரபல நடிகர் ரஜினிகாந்த் திருப்பதி சென்ற நிலையில் அங்கிருந்து அடுத்து ஒரு தர்காவுக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழின் பிரபல நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். சுமார் 6 ஆண்டுகள் கழித்து திருப்பதிக்கு தரிசனத்திற்கு வந்திருப்பதாக ரஜினிகாந்த் கூறினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் அடுத்து ஒரு தர்காவுக்கு ரஜினிகாந்த் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடப்பாவில் உள்ள பிரபலமான ஆமீன் பீர் தர்காவிற்கு ரஜினிகாந்த் செல்லும் நிலையில் அவருடன் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் செல்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சௌந்தர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்க உள்ள படம் ‘லால் சலாம்’. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் படக்குழுவினரின் இந்த பயணம் வைரலாகியுள்ளது.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்