ரஜினியின் லால் சலாம் படத்தின் ஷூட்டிங் தொடக்கம் எப்போது?

வியாழன், 15 டிசம்பர் 2022 (16:40 IST)
ரஜினி, அடுத்து தன் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

ஐஸ்வர்யா இயக்கும் புதிய படமான லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகன்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் கடைசியாக குசேலன் மற்றும் ரா ஒன் ஆகிய படங்களில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் மும்பையில் இந்த படத்துக்கான இசைப் பணிகளை ஏ ஆர் ரஹ்மான் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இது சம்மந்தமான வீடியோவை ரஹ்மான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது வைரல் ஆகி வருகிறது. 

இதையடுத்து இந்த படத்தின் ஷூட்டிங், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாத இறுதியில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்