ஜெயிலர் வெற்றியால் ரஜினிக்கு கூடுதல் சம்பளம்… காசோலையை அளித்த கலாநிதி மாறன்!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (07:26 IST)
ரஜினியின் தர்பார் மற்றும அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால் ஜெயிலர் படத்துக்கு அவருக்கு சம்பளம் குறைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் ரிலீஸ் ஆன ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. உலகளவில் திரையரங்கில் 525 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இப்போது படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்தை சந்தித்து காசோலை ஒன்றை கொடுத்துள்ளார். படத்தில் அவருக்கு பேசப்பட்ட சம்பளத்தை விட கூடுதலாக 20 கோடி ரூபாய் அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றிதான் இதற்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்