''இஸ்ரோ நிறுவனத்தின் சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் அவர்கள் பணியாற்றினார். உலகமே புகழும்படி வேலையைச் செய்துள்ளனர். எனவே ரஜினியின் அனுமதியுடன் வீரமுத்துவேலின் பெற்றோரை அவர்களது வீட்டில் நேரில் சென்று பெற்றோரை பார்த்தேன். அவரது பெற்றோர் நீடுழி வாழ வேண்டும்…அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.. அந்த மாதிரி புத்திரரன் இவர்களுக்கு கிடைத்துள்ளார். இன்னும் சந்திரனுக்கு போக ஏற்பாடுகள் செய்யட்டும்….''என்றார்.
ஜெயிலர் படம் பற்றிய செய்தியாளார்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ஜெயிலர் படம் வித்தியாசமாக உள்ளது. திரும்ப திரும்ப அப்படத்தைப் பார்த்து வருகின்றனர். இன்னும் நிறைய வெற்றிப் படம் கொடுக்க வேண்டும்.'' என்றார்.