ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பாராட்டிய சிம்பு!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (12:51 IST)
2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது இயக்கி உள்ளார் கார்த்திக் சுப்பராஜ். ஜிகர்தண்டா 2 வில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். படம் 1975களில்  நடப்பதாக உருவாக்கப் பட்டுள்ளது. படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

ரிலீஸ் ஆனது முதல் இந்த படத்துக்கு சிறப்பான பாசிட்டிவ் விமர்சனங்கள் வரும் நிலையில் படத்துக்கு வசூலும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. முதல் இரு நாட்களில் 7 கோடி ரூபாய் வசூலித்த ஜிகர்தண்டா, தீபாவளி நாளில் 7 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். நாளுக்கு நாள் அதன் வசூல் அதிகமாகிக் கொண்டே போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர்கள் மட்டுமின்றி திரைக்கலைஞர்களையும் கவர்ந்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தைப் பார்த்துள்ள சிம்பு, அதைப் பாராட்டி பதிவிட்டுள்ளார். இது சம்மந்தமாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில் “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் புத்திசாலித்தனமான படம்.  சினிமா எனும் ஊடகத்தின் ஆற்றலை படம் காட்டுகிறது. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது.  நமக்கு ஒரு அருமையான படத்தைக் கொடுத்துள்ள கார்த்தி சுப்பராஜ்க்கு வாழ்த்துகள். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்