ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் முதல் வார இறுதி கலெக்‌ஷன் இவ்வளவா?

திங்கள், 13 நவம்பர் 2023 (12:22 IST)
2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது இயக்கி உள்ளார் கார்த்திக் சுப்பராஜ். ஜிகர்தண்டா 2 வில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். படம் 1975களில்  நடப்பதாக உருவாக்கப் பட்டுள்ளது. படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

ரிலீஸ் ஆனது முதல் இந்த படத்துக்கு சிறப்பான பாசிட்டிவ் விமர்சனங்கள் வரும் நிலையில் படத்துக்கு வசூலும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. முதல் இரு நாட்களில் 7 கோடி ரூபாய் வசூலித்த ஜிகர்தண்டா, நேற்று தீபாவளி நாளில் 7 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம்.

இதன் மூலம் முதல் 3 நாட்களில் 14 கோடி ரூபாய் வசூலித்து, தீபாவளி ரேஸில் வின்னராக வலம் வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்