அட்லி & அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்!

vinoth

புதன், 2 ஏப்ரல் 2025 (11:48 IST)
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லி பாலிவுட் சென்று ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக் கானுக்குக் கொடுத்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். அடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த படம் பேச்சுவார்த்தையோடு கைவிடப்பட்டது.

இதையடுத்து அவர் சல்மான் கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் அதற்கான திரைக்கதை வேலைகள் நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த படம் தற்போதைக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அட்லி, அல்லு அர்ஜுன் மற்றும் சன் பிக்சர்ஸ் கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏப்ரல் 8 ஆம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்தநாலை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ஏற்கனவே மகேஷ் பாபு, ராஜமௌலி படத்தில் அவர்தான் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்