அவதார் கெட்டப்பில் ஜெயம் ரவி… வைரலாகும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (11:54 IST)
நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட அது இப்போது கவனத்தைப் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. அவர் நடிப்பில் கடைசியாக பூமி திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதையடுத்து தற்போது அவர் அகிலன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். அகமது இயக்கும் படம், இயக்குனர் எம் ராஜேஷ் கூட்டணியில் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு ரீல்ஸ் வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் தன்னுடைய முகத்தில் அவர் அவதார் படத்தில் வருவது போல மாற்றி வெளியிட அது இப்போது வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jayam Ravi (@jayamravi_official)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்