இந்த தெலுங்கு படத்தின் ரீமேக்கா விஜய்யின் 69 ஆவது படம்..!

vinoth
திங்கள், 9 டிசம்பர் 2024 (09:02 IST)
GOAT படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. KVN புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கடந்த மாதம் தொடங்கிய இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. இதற்கிடையில் இந்த படம் தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை உறுதிப்படுத்துவது போல தளபதி 69 படத்தினைத் தயாரிக்கும் கேவிஎன் நிறுவனம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. இரண்டு படங்களிலும் சிலக் காட்சிகள் ஒற்றுமையாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்