திருவண்ணாமலை மண்சரிவு: அதிர்ச்சி அடைந்த ரஜினிகாந்த்..!

Siva

திங்கள், 9 டிசம்பர் 2024 (09:32 IST)
சமீபத்தில் பெரிதாக கனமழையின் போது திருவண்ணாமலையில் மண் சரிவு காரணமாக வீடு இடிந்து ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து ரஜினிகாந்த் இன்று அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.

’கூலி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஜெய்ப்பூர் செல்லும் ரஜினிகாந்த் இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திருவண்ணாமலை மண் சரிவில் ஏழு பேர் உயிரிழந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது ’எப்போ நடந்தது’ என்று கேட்டார். அதற்கு ஃபெஞ்சல் புயலின் போது நடந்தது என்று செய்தியாளர்கள் கூறிய போது ’ஓ மை காட் எக்ஸ்ட்ரீம்லி  சாரி’ என்று பதில் அளித்தார்.

 மேலும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் செல்வதாகவும், படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

 திருவண்ணாமலை மண்சரிவு ஏற்பட்ட ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் நடந்து பத்து நாட்கள் ஆன பின்னர் அந்த சம்பவம் குறித்து தெரியாமல் ’எப்போ நடந்தது’ என்று ரஜினிகாந்த் கேட்டிருப்பது சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்