விடாமுயற்சி பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்குமா?... அஜித்தின் மேலாளர் பகிர்ந்த தகவல்!

vinoth

திங்கள், 9 டிசம்பர் 2024 (09:30 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கி நிறைவடைந்துள்ளது.

படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் படத்தின் டீசர் ரிலீஸானபோது அதன் ரிலீஸ் அடுத்த ஆண்டு பொங்கல் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் படத்தில் இன்னும் 10 நாட்கள் ஷூட்டிங் செய்து அதை படத்தொகுப்பு செய்ய வேண்டிய வேலை மீதமுள்ளதாம். அதற்கான ஷூட்டிங் டிசம்பர் 17 ஆம் தேதி தொடங்குகிறது. இதனால் படம் எதிர்பார்த்தபடி ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இதுபற்றி பேசும்போது கண்டிப்பாக படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் எனவும் அஜித் தனது டப்பிங் பணிகளை முடித்துவிட்டார் எனவும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்