நான் கஷ்டப்பட்டது எல்லாம் உங்களுக்கு தெரியணும்னு அவசியம் இல்லை.. லப்பர் பந்து இயக்குனரின் நச் பதில்!

vinoth
வியாழன், 3 அக்டோபர் 2024 (14:33 IST)
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’ திரைப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். இந்த படம் இதுவரை 20 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது.

இதையடுத்து இந்த படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவரளித்த நேர்காணலில் தொகுப்பாளர் சினிமாவில் வெற்றி பெற அவர் பட்ட கஷ்டங்கள் என்னவெல்லாம் என்பது பற்றிய கேள்வி ஒன்றை எழுப்பினார்.

அதற்கு தமிழரசன் “நான் சினிமாவில் வெற்றி பெற கஷ்டப் பட்டிருக்கிறேன்தான். ஆனால் அதை ஏன் நான் பகிர்ந்துகொள்ள வேண்டும். நான் யாருக்காக கஷ்டப்பட்டேன். எனக்காகதானே கஷ்டப்பட்டேன். நான் என்ன ராணுவ வீரர்கள் போல நாட்டுக்காகக் கஷ்டப்பட்டேனா? பிறகு ஏன் அதை சொல்ல வேண்டும்,” எனக் கேட்டுள்ளார். அவரின் இந்த பதிலுக்கு ரசிகர்கள் பாராட்டுகளைக் கூறி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்