வரும் பொங்கல் தினத்தில் அஜித்தின் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் நிலையில் அதே தினத்தில் வேறு பெரிய படங்கள் ரிலீஸாக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதே பொங்கல் தினத்தில் தனுஷ் மற்றும் விக்ரம் படங்கள் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாறன் திரைப்படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகலாம் என்றும் அதே போல் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மகான் திரைப்படமும் ஓடிடியில் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது
மேலும் அன்பறிவ் திரைப்படமும் ஓடிடியில் பொங்கலுக்கு ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது