சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா வார்டில் இருந்து தப்பித்து சென்ற நிலையில் மீண்டும் சிகிச்சைக்கு வராமல் அதிகாரிகளை மிரட்டி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000 ஐ நெருங்கி வருகிறது. அவர்களுக்கு ஆங்காங்கே உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிகிச்சையின் போது மருத்துவர்களோடு ஒத்துழைக்காமல் சில நோயாளிகள் முரண்டு பிடிப்பதும் நடக்கிறது.
ஏற்கனவே இதுபோல சம்பவங்கள் நடந்து வரும் வேளையில் இப்போது சென்னையில் கொரோனா வார்டில் இருந்து தப்பித்த ஒருவர் சிகிச்சைக்கு வரமாட்டேன் என்று முரண்டு பிடித்து வருகிறார். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த அந்த நபர், நேற்று (ஏப்ரல் 27) இரவு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையறிந்த போலிஸார் அவரது வீட்டுக்கு சென்று அவரை மருத்துவமனைக்கு அழைத்துள்ளனர். சிகிச்சைக்கு வரமறுத்த அவர், , தன்னை யாராது நெருங்கினால் கட்டிப்பிடித்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். போலீஸார் விடிய விடிய பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் சமாதானமாகவில்லை. இதனால் இன்று காலை மருத்துவக் குழுவினர் மீண்டும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அந்த நபர் சிகிச்சைக்கு வரமறுத்து முரண்டு பிடித்து வருகிறார்.