அன்றைக்கும் இன்றைக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்.. அஜித்துடன் நடித்தது குறித்து அர்ஜூன் தாஸ்..!

Siva

வியாழன், 10 ஏப்ரல் 2025 (09:44 IST)
அஜித் நடித்த 'குட் பேட் அக்லி’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வரும் நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் அர்ஜுன் தாஸ் எமோஷனலாக தனது எக்ஸ் பக்கத்தில் செய்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த பதிவில் அவர் என்ன கூறியிருக்கிறார் என்பதை தற்போது பார்ப்போம்.
 
 இன்னும் சில மணிநேரங்கள்தான் இருக்கு. பதட்டம், உற்சாகம், ஆவல், எல்லாம் ஒரே நேரத்தில் வருகிறது.
 
நான்  அஜித் சார் படங்களுக்கு மார்க்கெட்டிங் & ப்ரோமோஷன் வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கும்போது, ஒருநாள் அவரோட சேர்ந்து நடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கல. ஆனா பல வருடங்களுக்குப் பிறகு, அது நிஜமாக மாறி விட்டது.
 
இரவெல்லாம் தூங்காம, அதிகாலையிலேயே தியேட்டருக்கு போய், தியேட்டர் சுற்றிப்பார்க்க, ரசிகர்கள் எப்படி படம் வாங்கறாங்கனு பாக்க ஆரம்பித்தோமோ, அந்த நினைவுகள் இன்னும் மனசில் மின்னிக்கிடக்குது. அந்த பயணத்தை இன்று முதல் மீண்டும் தொடக்கப்போகிறேன். ஒரே வித்தியாசம், இந்த முறை, திரையில் நானும் அவருடன் இருப்பேன். உங்க ரெஸ்பான்ஸ் நேர்ல பார்ப்பேன்!
 
அஜித் சார்,  என்னை நம்பி, இந்த வாய்ப்பை தந்ததற்காக நன்றி. இது எனக்கு ஒரு பெரும் பெருமை. உங்களோட ஒவ்வொரு நாளும், உங்கள்  பாசம்,  உரையாடல்கள், காமெடி, காபி, ரோட்ரிப், அறிவுரைகள் அனைத்துமே என் வாழ்க்கையின் அழியாத பக்கம். இதை நான் ஏற்கனவே சொன்னேன், இன்னும் ஒரு முறை சொல்றேன். இது உங்களால்தான், உங்களுக்காகத்தான். மீண்டும் உங்களுடன் பணியாற்றும் நாள் விரைவில் வரணும்.
 
அஜித் ரசிகர்களே, உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. உங்களுடைய அந்த ஒளிமிக்க ஆதரவு எனக்கு பெரும் ஊக்கம். Good Bad Ugly படத்தை பார்ப்பது உங்கள் அனைவருக்கும் ஒரு இனிமையான அனுபவமாக அமையும் என நம்புகிறேன்.
 
ஆதிக் அண்ணா, மனதின் ஆழத்திலிருந்து நன்றி. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் வாக்குறுதியை மறந்துடாதீங்க, சில மணி நேரத்தில் தியேட்டர்ல சந்திக்கலாம்!
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்