கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி லட்சக்கணக்கானோரை பலி கொண்டுள்ளது. இதனால் உலக நாடுகள் பல பொருளாதாரரீதியாக பெரும் சரிவை சந்தித்துள்ளன. இந்நிலையில் கொரோனா உலகம் முழுவதற்கு பரவியதற்கு காரணம் சீனாதான் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஜெர்மனி ஒருபடி மேலே சென்று ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகளுக்கு 130 பில்லியன் யூரோக்கள் அளிக்க வேண்டும் என சீனாவிடம் கேட்டுள்ளது. மேலும் பல நாடுகளும் சீனா மீது குற்றம் சுமத்தி வருகின்றன.
இதுகுறித்து பேசியுள்ள அதிபர் ட்ரம்ப் ”கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவிற்கு மட்டும் சேதாரம் ஏற்படவில்லை. சீனாவிலிருந்து பரவி பாதிப்பை ஏற்படுத்திய இந்த வைரஸ் பரவ சீனாவே காரணம். சீனா உண்மையை உலகுக்கு சொல்லாமல் மறைத்ததால் ஏற்பட்ட விளைவு இது. இதுதொடர்பான தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறோம். சரியான நேரத்தில் உங்களுக்கு தகவலை தெரிவிப்போம்” என தெரிவித்துள்ளார்.