உச்ச்கட்ட மோதலால் இன்னும் தொடங்காத சிவகார்த்திகேயன் மாவீரன் ஷூட்டிங்!

Webdunia
சனி, 5 நவம்பர் 2022 (11:34 IST)
டாக்டர் மற்றும் டான் மற்றும் பிரின்ஸ் ஆகிட படங்களுக்குப் தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். ஹீரோயின் வேடத்துக்கு இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சமீபத்தில் மோதல் உச்சத்தை எட்டி படப்பிடிப்பே நிறுத்தப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே தயாரிப்பாளர் தரப்பு சமரசம் பேசியும் இன்னும் சமாதானம் ஆகாமல் ஷூட்டிங் தொடங்கப் படாமலேயே உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்