அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தினால் பொங்கல் ரிலீஸ் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் அப்டேட் வெளியாகி உள்ள நிலையில் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் விடாமுயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி உள்ளது.