வாரிசு படத்தோடு சிவகார்த்திகேயனின் மாவீரன் டீசர் ரிலீஸா?

திங்கள், 31 அக்டோபர் 2022 (15:58 IST)
சிவகார்த்திகேயன் மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

டாக்டர் மற்றும் டான் படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். ஹீரோயினாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார்.

இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் ப்ரமோஷனாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் வாரிசு திரைப்படத்தோடு இடைவேளையில் இந்த படத்தின் டீசர் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்