சிவகார்த்திகேயன் மறுத்ததால் அதர்வாவுக்கு சென்றதா ரஜினி பட வாய்ப்பு?

செவ்வாய், 1 நவம்பர் 2022 (10:25 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கௌரவ வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன் மகள் ஐஸ்வர்யா இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த படம் பற்றிய அப்டேட் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க முதலில் சிவகார்த்திகேயனை அனுகியதாகவும், ஆனால் அவரிடம் தேதிகள் இல்லாததால் அவர் நடிக்க மறுத்ததால், அந்த வாய்ப்பு அதர்வாவுக்கு சென்றுள்ளதாகவும் இப்போது தகவல்கள் பரவி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்