பிரபல சினிமா ’பின்னணி பாடகி ’மருத்துவமனையில் அனுமதி ....ரசிகர்கள் பிரார்த்தனை

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (17:19 IST)
பிரபல ஹிந்தி சினிமா பின்னணி பாடகி லதா மன்கேஸ்கர் மூச்சு திணறல் காரணமாக, இன்று அதிகாலையில் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய சினிமாவில் மிக மூத்த  பின்னணி பாடகி  லதா மங்கேஷ்கர் . இவர், 65 ஆண்டுகளாக சினிமா வாழ்வில்,  20 பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் 30 ஆயிரத்துக்கு மேலான பாடல்களை பாடி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
 
இவர் சமீபத்தில் தனது  90 வது பிறந்தநாளை கொண்டாடினார்.
 
இந்நிலையில்,இன்று, அதிகாலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், மும்மையில் உள்ள ப்ரீச் கேண்டு மருத்துவமனையில் ஔமதிக்கப்பட்டார். இதை அறிந்த அவரது ரசிகர்கள், அவர் குணமாக வேண்டி   பிராத்தனை செய்து வருகின்றனர்.

இவர் தமிழில் , எங்கிருந்தோ அழைக்கும், ஆராரோ ஆராரோ, வளையோசை கலகல,போன்ற ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்