வருத்தப்படாத வாலிபர் சங்கம், தெகிடி, திருட்டு பயலே 2 உள்ளிட்ட திரைப்படங்களில் துணை கதாநாயகியாக நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் ஷாலு. சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் செம ஆக்டிவாக இயங்கிகொண்டிருக்கும் ஷாலு, பாவாடை தாவணி அணிந்து தனது நண்பருடன் ஒரு ஆங்கில பாடலுக்கு வளைந்து நெளிந்து நடனமாடும் வீடியோவை தனது இன்ஷ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய ஷாலு, தனது நண்பருடன் பஜாடா நடனமாடி ஒரு வீடியோவை வெளியிட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் தனது நண்பருடன் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.