அருவி இயக்குனரின் அடுத்த படம்… வாழ் தோல்வியால் எடுத்த முடிவு!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (10:54 IST)
அருவி மற்றும் வாழ் இயக்குனர் அடுத்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறாராம்.

அருவி படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் அருண் பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படம் வாழ். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்தார். இந்த படம் சோனி லைவ் நிறுவனம் ஜூலை 16 ஆம் தேதி ரிலிஸ் ஆனது. சிவகார்த்திகேயனுக்கு ஒரு வகையில் தம்பி முறை உறவினர் என்பதால் அந்த படத்தை சிவகார்த்திகேயனே தயாரித்தார். ஆனால் இந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் அடுத்த படத்தை எப்படியும் கமர்ஷியல் வெற்றி பெற செய்யவேண்டும் என்ற முடிவில் இப்போது திரைக்கதை அமைக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்