பாண்டிச்சேரியில் முகாமிட்ட சுந்தர் சி படக்குழு!

செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (10:17 IST)
நடிகர் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இப்போது பாண்டிச்சேரியில் முகாமிட்டுள்ளது.

சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் படம் ஒன்றை அவரின் உதவியாளரான பத்ரி இயக்க உள்ளார். அவருக்கு வில்லனாக நடிக்க ஜெய் சம்மதித்துள்ளார் என்பது மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த படத்தை சுந்தர் சியே  தயாரிக்கிறார். தலைநகரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த சுந்தர் சி ஒரு கட்டத்தில் வரிசையாக ப்ளாப் படங்கள் கொடுக்க நடிப்பை விட்டு விலகி இயக்கத்தில் ரி எண்ட்ரி கொடுத்தார். இப்போது மீண்டும் அவருக்கு நடிப்பு ஆசை ஏற்பட்டுள்ளதால் நடிப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் இப்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். பெரும்பாலான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்