அரசியலுக்கு வந்தால் சுதந்திரம் பறிபோய்விடும்… பிரபல நடிகர் சோனு சூட் கருத்து!

vinoth

சனி, 28 டிசம்பர் 2024 (09:44 IST)
இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தவர் சோனு சூட். கொரோனா காலத்தில் ஏராளமாக மக்களுக்கு போக்குவரத்து உதவிகளை செய்ததன் மூலம் நற்பெயரை ஈட்டினார்.  புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பேருந்துகளை ஏற்பாடு செய்து பெரும் அளவிலான உதவிகளை செய்தார். இதனால் அவரை அவர் பிறந்த மாநிலமான பஞ்சாப் மாநில ஐகானாக பஞ்சாப் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் அளவுக்கு அவர் புகழ் பரவியது.

ஆனால் சோனு சூட்டின் இந்த உதவிகளுக்குப் பின்னால் ஏதோ காரணம் இருக்கிறது. அவர் அரசியலுக்கு வரவே இப்படியெல்லாம் செய்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் இப்போது அவர் ‘அரசியலுக்கு வந்தால் சுதந்திரம் போய்விடும்’ எனக் கூறியுள்ளார்.

இது சம்மந்தமாக அவர் “நாம் பிரபலமடைந்தால் உயரமான இடத்துக்கு செல்கிறோம் என்று அர்த்தம். அங்கு ஆக்ஸிஜன் கம்மியாக இருக்கும். அதனால் எவ்வளவு தூரம்செல்ல வேண்டும் என்பதை நாம் முடிவு செய்துகொள்ளவேண்டும். அரசியலுக்கு வருபவர்கள் பணம் மற்றும் அதிகாரத்துக்காகதான் வருகிறார்கள். எனக்கு இரண்டின் மேலும் ஆர்வம் இல்லை. மக்களுக்காகதான் என்றால் நான் அதை அரசியலுக்கு வராமலேயே செய்து கொண்டுதான் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்