ஜெயிலர் 2 வுக்குப் பிறகு பேன் இந்தியா நடிகரோடு இணையும் நெல்சன்!

vinoth

சனி, 28 டிசம்பர் 2024 (07:44 IST)
தமிழ் சினிமாவில் வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார் இயக்குனர் நெல்சன். ஆனால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து ‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தின் மூலம் அவர் கம்பேக் கொடுத்தார்.

அந்த படம் வெற்றியடைய அடுத்து சிவகார்த்தியோடு ‘டாக்டர்’ மற்றும் விஜய்யோடு ‘பீஸ்ட்’ மற்றும் ரஜினியோடு ‘ஜெயிலர்’ என அவர் கிராஃப் எகிறிக்கொண்டே செல்கிறது. இப்போது ஜெயிலர் 2 பட வேலைகளில் இருக்கிறார்.

இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தை முடித்த பின்னர் அவர் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என் டி ஆருடன் இணைந்து ஒரு படம் இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தற்போது ஜூனியர் என் டி ஆர் ‘வார் 2’ மற்றும் பிரசாந்த் நீல் இயக்கும் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிந்த பின்னர் நெல்சன் இயக்கும் படம் தொடங்கலாம் என சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்