ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. தற்போது அவர் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளார். அதன் பின்னர் வேறு எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை என்றும் அத்துடன் நடிப்பில் இருந்து விலகவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலானவர்கள் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் புதிதாக கேஜிஎஃப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.