அம்மா சென்டிமென்டுடன் ரிலீஸாகும் ‘அண்ணாதுரை’

Webdunia
புதன், 29 நவம்பர் 2017 (13:37 IST)
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாதுரை’ படம், அம்மா சென்டிமென்டுடன் உருவாகியுள்ளது.
சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘அண்ணாதுரை’. இந்தப் படத்தில் அண்ணாதுரை, தம்பிதுரை என இரட்டையர்கள் வேடத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இயக்குநரும் இரட்டையர்தான். எனவே, அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களில் இருந்தே இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கிறார்.
 
விஜய் ஆண்டனி நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ‘பிச்சைக்காரன்’. அம்மா சென்டிமென்டுடன் உருவாகியிருந்த அந்தப் படம் பயங்கர ஹிட் என்பதால், இந்தப் படத்திலும் அம்மா சென்டிமென்ட் நிறைந்திருக்கிறதாம். வருகிற வெள்ளிக்கிழமை இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்