சீனுராமசாமியை தொடர்ந்து அன்புச்செழியனுக்கு விஜய் ஆண்டனி ஆதரவு

வியாழன், 23 நவம்பர் 2017 (16:01 IST)
தமிழ் சினிமா துறையில் உள்ள பலரும் நிதியாளரான அன்புச்செழியன் மீது புகார் கூறி வரும் நிலையில் இயக்குநர் சீனு ராமசாமியை தொடர்ந்து விஜய் ஆண்டனியும் ஆதரவான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.


 
பிரபல நடிகர், இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமர் தற்கொலை செய்து கொண்டதௌ அடுத்து தமிழ் சினிமா துறையில் உள்ள கந்துவட்டி கொடுமையை வெளி வந்துள்ளது. இயக்குநர் சுசீந்திரன், கமல் உள்ளிட்ட பலரும் கந்துவட்டி கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் தான் அசோக் குமார் தற்கொலைக்கு காரணம்.
 
அன்புச்செழியன் கந்துவட்டியை வைத்து தமிழ் சினிமா துறையை தன் கைக்குள் வைத்து பலரையும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளதாக தொடர்ந்து தகவல் வந்து கொண்டே இருக்கிறது. தற்போது தலைமறைவாகியுள்ள அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் மதுரைக்கு விரைந்துள்ளனர்.
 
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால், அன்புச்செழியன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் நேற்று இயக்குநர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் அன்புச் செழியன் உத்தமன் என டுவீட் செய்திருந்தார். இதையடுத்து அவரது கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர் ட்வீட் நீக்கப்பட்டது.
 
இந்நிலையில் விஜய் ஆண்டனி இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 
 
அசோக் குமார் அவர்களின் தற்கொலையை நினைத்து நான் மிகவும் மனவேதனைப்படுகிறேன். நான் 6 வருடமாக தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட வினியோகஸ்தர் அன்புச் செழியனிடம் பணம் வாங்கித்தான் படங்கள் எடுத்து வருகிறேன். வாகிய பணத்தை முறையாக திரும்ப செலுத்தியும் வருகிறேன். இதுநாள் வரையில் அவர் என்னிடம் சரியான முறையில்தான் நடந்து வருகிறார்.
 
அனைவரும் அவரை சற்று மிகைப்படுத்தி சித்தரிப்பதாக தோன்றுகிறது. திரைப்படத் துறையில் 99% தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் கடன் வாங்கி படம் எடுத்து தான் இந்நாள் வரையில் முன்னேறி இருக்கிறார்கள். அசோக் குமார் அவர்களின் மரணம் தற்கொலையின் கடைசி மரணமாக இருக்க வேண்டும். எனக்கும் கடன் இருக்கிறது, உழைத்து கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்