முருகதாஸின் அடுத்த படத்தில் ஃபஹத் பாசில்… பாலிவுட்டில் எண்ட்ரி!

vinoth

புதன், 26 ஜூன் 2024 (15:20 IST)
ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்படவில்லை. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு இடையிலேயே முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஷூட்டிங் மும்பையில் தொடங்கியது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கியவேடத்தில் நடிக்க மலையாள நடிகர் பஹத் பாசில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் தனது தனித்துவமான நடிப்பால் கலக்கிய பஹத் பாசில் இந்த படத்தின் மூலம் பாலிவுட்டிலும் எண்ட்ரி கொடுக்கவுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்