நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தான் முதன்முதலில் அன்புச்செழியன் நல்லவர் என்ற சான்றிதழை கொடுத்தார். அவருக்கு பின்னர் சீனுராமசாமி, தேவயானி, சுந்தர் சி உள்பட பலர் அன்புச்செழியனுக்கு ஆதரவு கொடுத்தனர்.
விஜய் ஆண்டனி... உங்களுக்கு நல்லவராய் தோன்றுபவர், ஆறு மாதம் முன்னர் வரை சசிகுமாருக்கும் நல்லவர்தான்! விஜய் ஆண்டனி, நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற அதிர்ஷ்டமும், கடனை திருப்பிச்செலுத்தும் உறுதியும், அன்புச்செழியன் பற்றிய நிலைப்பாடும், மாறாதிருக்க பரம பிதா அருள் பாலிக்கட்டும் என்று கூறியுள்ளார்.