106 வயசுல எப்படி சண்டை போட முடியும்… இந்தியன் தாத்தா குறித்த கேள்விகளுக்கு ஷங்கர் பதில்!

vinoth

புதன், 26 ஜூன் 2024 (15:15 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரைலரில் அதிக காட்சிகளில் கமல் இல்லை. அதனால் இந்த பாகத்தில் அவர் குறைவான நேரமே வருவாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதே போல படத்தில் சேனாபதி கதாபாத்திரத்தின் வயது 106 எனக் காட்டப்படுகிறது. அதனால் எப்படி 106 வயது முதியவரால் படத்தில்  வருவது போல சண்டை போட முடியும் என விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கு இயக்குனர் ஷங்கர் ஒரு பதிலளித்துள்ளார். அதில் “சைனாவில் லூசி ஜியாங் என்ற 120 வயது மார்ஷல் ஆர்ட்ஸ் குரு இன்னும் மார்ஷல் ஆர்ட்ஸ் செய்கிறார். அவரைப் போலவே சேனாபதி கதாபாத்திரமும் ஒரு மார்ஷல் ஆர்ட்ஸ் மாஸ்டர். அவர் வர்மக் கலை மாஸ்டர்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்