1000 கோடி ருபாய் வசூல் என்பது பிரபாஸுக்கு சாதாரணம்… ஆனால் எனக்கு? – அமிதாப் பச்சன் பெருமிதம்!

vinoth
வியாழன், 18 ஜூலை 2024 (10:15 IST)
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்த படம் நல்ல வசூலை தொடக்கம் முதலே பெற்று வந்தது. இந்நிலையில் இப்போது 1000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் மூலம் பிரபாஸ் பாகுபலி 2 படத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக 1000 கோடி ரூபாய் வசூலைக் கொடுத்த முதல் தென்னிந்திய ஹீரோ என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமிதாப் பச்சன் “1000 கோடி ரூபாய் என்பது பிரபாஸுக்கு சாதாரணமாக இருக்கலாம். ஏனென்றால் அவர் படங்கள் இந்த மைல்கல்லை முன்பே எட்டியுள்ளன. ஆனால் எனக்கு இது பெரிய விஷயம். நான் இந்த படத்தை நான்கு முறைப் பார்த்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் புதிய அனுபவம் கிடைக்கிறது.” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்