கவின், இப்போது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் விருப்ப நடிகர்களில் ஒருவராகியுள்ளார். இந்நிலையில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் கிஸ் என்ற படத்தில் கவின் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.