புஷ்பா 2 ரிலீசான தினத்தில் ரசிகை ஒருவர் பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐதராபாத்தில் டிசம்பர் 4ஆம் தேதி, புஷ்பா 2 திரைப்படம் பார்க்க வந்த ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இதே நிகழ்வில் அவருடைய மகனும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் அல்லு அர்ஜுன் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அவரது தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், நடிகர் வேண்டுமென்று யாரையும் புண்படுத்தவில்லை என்றும் ஏற்கனவே மும்பையில் சிறப்பு காட்சியில் ஒருவர் உயிரிழந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அல்லு அர்ஜுன் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் உள்பட ஏழு பேருக்கும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்த நிபந்தனைகளின் படி, அனைவரும் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.