மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.
லோகேஷ் தற்போது உருவாகியிருக்கும் கூலி படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு கைதி 2 படத்தை தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கைதி திரைப்படம் LCU வாக உருவாகவுள்ள நிலையில் அதில் நடிக்க கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அவர் கைதி 2 படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் விஜய் நடிப்பாரா என்பது சந்தேகம்தான் என சொல்லப்படுகிறது. ஆனால் LCU வில் இடம்பெற்ற மற்ற நடிகர்கள் அனைவரும் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.