’ஏகே 61’ படப்பிடிப்பு: விசாகப்பட்டிணம் கிளம்பினார் அஜித்!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (11:06 IST)
அஜித் நடித்து வரும் ’ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அஜித் இன்று சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் கிளம்பியுள்ளார். 
 
அஜித் நடித்து வரும் ’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த அஜீத் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார் என்பதும் அதன் பின்னர் திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மீண்டும் இன்று முதல் ’ஏகே 61’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதை அடுத்து விசாகப்பட்டினத்திற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் அஜித் கிளம்பியுள்ளார் 
 
இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படப்பிடிப்பில் நடிகை மஞ்சுவாரியார் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்